கனடாவில் இலங்கை குடும்பத்தினர் படுகொலை சம்பவம்: உயிர் தப்பியவரின் நிலைமை

கனடாவில் வாழ்ந்துவந்த இலங்கையர்களான 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

கனடாவின் ஒட்டாவா மாகாணத்திலுள்ள Barrhaven என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த, இலங்கையர்களான தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர், அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவரால் கொல்லப்பட்டனர்.

மேலும், தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த மற்றொரு நபரான அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) என்பவரும் தாக்குதலில் பலியாகியுள்ளார்.