கனடாவில் கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! பொலிஸார் முக்கிய தகவல்

கனடாவின் போமன்வில்லேவில்(Bowmanville) கர்ப்பிணி பெண் மற்றும் அவரது துணைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

28 வயதான ஆராம் காமல்(Aram Kamel) மற்றும் 26 வயதான ரஃபத் அல்சுபைதி(Rafad Alzubaidy) ஆகியோர் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று போமன்வில்லேவில்(Bowmanville) உள்ள அவர்களது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டனர். 

26 வயது பெண்ணான அல்சுபைதி கொலை செய்யப்பட்ட சமயத்தில் ஆறு மாத கர்ப்பிணி(six months pregnant) என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக நெருங்கிய தூரத்தில் இருந்து பலமுறை சுடப்பட்டதில் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கைது மற்றும் குற்றச்சாட்டு

இந்த குற்றச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட Toronto பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் மேலும் ஒருவர் என 3 பேரும் இந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது இரண்டு முதல் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் மார்ச் 8, 2024 வெள்ளிக்கிழமையில்  வெளியிடப்பட்டன.